திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருமகள் மீது நடத்தை சந்தேகம்; 1 வயது பேத்தியின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொன்ற தாய்க்கிழவி..!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை, கோட்டைக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜா. இவரின் மனைவி சந்தியா (வயது 21). ராஜா தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தம்பதிகளுக்கு மோனிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை, 1 வயது பெண் குழந்தை இருந்தன. குழந்தைகள் வீட்டில் தாய் மற்றும் மாமியார் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள்.
இதனிடையே, குழந்தைகளை சந்தியா தனது வீட்டின் வெளியே விட்டுவிட்டு, பால் பண்ணைக்கு சென்றுள்ளார். வீட்டில் மாமியார் இருந்த நிலையில், பால் ஊற்றிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தியா, தனது மகள் கிருத்திகா சுயநினைவு இன்றி வாயில் மண்ணுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
குழந்தை வாயில் மண்ணுடன் மரணம்
இதனால் பதறிப்போன சந்தியா, தனது குழந்தையை பெண்ணாடம் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்தார். இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த தளவாய் காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டருகே பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொடூர கொலை!!
மருமகள் மீதான சந்தேகத்தால் சோகம்
இந்த விஷயம் குறித்து சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தியாவின் பெண் குழந்தை பிறந்த சமயத்தில் இருந்து, குழந்தை எனது மகனுக்கு பிறக்கவில்லை. உன் கள்ளகாதலனுக்கு பிறந்தது என மாமியார் விருதாம்பாள் அவ்வப்போது மருமகளிடம் சண்டையிட்டு வந்தது உறுதியானது.
இதனையடுத்து, தளவாய் காவல்துறையினர் விருதாம்பாளிடம் நடத்திய விசாரணையில், மருமகள் மீதான சந்தேகத்தில் குழந்தையின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொலை செய்தது உறுதியானது. விசாரணைக்குப்பின்னர் விருத்தம்பாளை (60) கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவி விபச்சார வழக்கில் கைது.!! கணவரின் ஆத்திரத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.!!