#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம்.. விடுதியில் நடந்த விபரீதம்.. கபடநாடகம் அம்பலமானது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், தனியார் விடுதியில் சம்பவத்தன்று கணவன் - மனைவி எனக்கூறி தம்பதி அறையெடுத்து தங்கியிருந்து. அதில் கணவர் என கூறியவர் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டு, பின் மீண்டும் விடுதிக்கு வந்தார். அப்போது, அவருடன் இருந்த மனைவி என கூறப்பட்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது.
இதுகுறித்து நபர் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை நடந்தது உறுதியானது.
கள்ளக்காதல் உறவால் விபரீதம்
இதனையடுத்து, பெண்ணுடன் இருந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, கொலை சம்பவம் அம்பலமானது. மேலும், இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா, தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: போதையில் தந்தை அடித்துக்கொலை; மனைவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்.. நடந்தது என்ன?
இவருக்கு ஜெயராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி அறையெடுத்து தங்கியிருந்தபோது, சங்கீதாவின் நடத்தை குறித்து ஜெயராஜ் கேள்வி எழுப்பியதாக தெரியவருகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில் ஜெயராஜ் கள்ளக்காதலியை கொலை செய்து நடனமாடியது உறுதியானது.
இதையும் படிங்க: "புருஷனை உன்னோட சேர்த்து வைக்கிறேன்" ஜோதிடரின் சித்து வேலை.! வெறி தீர கொன்ற பெண்மணி.!