#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை; கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரின் மகன் அரவிந்த் (வயது 29). இவர் மஞ்சக்குப்பம் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினத்தில், நண்பர்கள் சிலருடன் பரமசிவம் நகரில் வைத்து மதுபானம் அருந்தி இருக்கிறார்.
போதையில் பயங்கரம்
அப்போது, அங்கு மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் பாலாஜி (வயது 26) - அரவிந்த் இடையே போதையில் தகராறு உண்டாகி இருக்கிறது. இதில் போதை தலைக்கேறிய நிலையில், பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் பயங்கரம்.. சித்தி அடித்துக்கொலை.! பாலக்கோட்டில் பகீர் சம்பவம்.!
குற்றவாளி கைது
இதில் மயங்கிய அரவிந்த் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அரவிந்த் உயிரிழந்தார். இதுதொடர்பாக அரவிந்தின் தாய் அமுதா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி பாலாஜியை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின்போது போதையில் காவலர்களிடம் தப்பிச் செல்ல முயன்ற பாலாஜி, தவறி விழுந்து கால் எலும்புகளை முறித்துக்கொண்டார். கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஏற்கனவே கஞ்சா உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: உல்லாசம் அனுபவித்துவிட்டு கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை.. காரணம் என்ன? கள்ளக்காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்.!