சொத்து தகராறில் பயங்கரம்.. சித்தி அடித்துக்கொலை.! பாலக்கோட்டில் பகீர் சம்பவம்.!



in-dharmapuri-palacode-step-mother-killed

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, எண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரங்கசாமி (வயது 65). இவர் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். 

ரங்கசாமியின் முதல் மனைவி மாரியம்மாள். ரங்கசாமி - மாரியம்மாள் தம்பதிக்கு ஜெயராஜ் (வயது 38) என்ற மகன் இருக்கிறார். 

பல ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் மனைவி தனது கணவரை பிரிந்த நிலையில், ரங்கசாமி - ஜோதி என்ற 45 வயதுடைய பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

இதையும் படிங்க: உல்லாசம் அனுபவித்துவிட்டு கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை.. காரணம் என்ன? கள்ளக்காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்.!

சொத்து தகராறு காரணமாக விபரீதம்

ரங்கசாமி - ஜோதி தம்பதிவுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரங்கசாமி தனது சொத்தில் பகுதியில் முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத மாரியம்மாள், சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

Murder

நேற்று ஜெயராஜ் தனது கூட்டாளி சந்தோஷ் (வயது 36) என்பவருடன் சேர்ந்து ரங்கசாமியின் மாரியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், அங்கு வீட்டினை தனது பெயருக்கு எழுதிக்கொடுக்க வற்புறுத்தி இருக்கிறார். 

இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் ஜெயராம், சந்தோஷ் சேர்ந்து மாரியம்மாளை தாக்கி இருக்கின்றனர். இதனை தடுக்க வந்த ஜோதியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைமறைவான குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம்.. விடுதியில் நடந்த விபரீதம்.. கபடநாடகம் அம்பலமானது எப்படி?