காந்திமதி யானை உடல்நலக்குறைவால் பலி: அண்ணாமலை இரங்கல்.!



  BJP Annamalai On Gandhimathi Elephant Death  

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் வசித்து வந்த காந்திமதி யானை, உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் வசித்து வந்த யானை, மூட்டு சிகிச்சையில் இருந்தபோது உயிரிழப்பு நடந்தது. இந்த விஷயம் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

யானை உயிரிழப்பு

இந்த விசயத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானையான காந்திமதி யானை, உடல் நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ரிப்பனில் இரத்தக்கறை.. இறந்த குழந்தையின் உடலை வைத்து நாடகம்?.! சிக்கிய புதிய சிசிடிவி காட்சி.!!

பக்தர்களுக்கு சோக செய்தி

கடந்த 1985 ஆம் ஆண்டு முதல், சுமார் நாற்பது ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலின் ஒரு அங்கமாக விளங்கிய காந்திமதி யானையை, இனி கோவிலில் காண முடியாது என்பது, பக்தர்களுக்கு மிகவும் சோகமான செய்தியாகும். காந்திமதி யானை, இறைவன் திருப்பாதங்களைச் சென்றடைந்திருக்கிறது. ஓம் சாந்தி!" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!