இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; தந்தை-மகன் பரிதாப பலி.!



in Theni Father Son Died Accident 

 

புத்தாண்டு தினத்தில் தந்தை - மகன் விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, ஜி. கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 55). இவரின் மகன் வீரமுத்து (வயது 25), திருமணம் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: அட கொடுமையே... துணி துவைத்ததில் தகராறு.!! மனநலம் பாதித்த நபர் கொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!

தந்தை, மகன் இருவரும் ஊர்ப்பகுதியில் இருக்கும் தோப்பில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே, சொந்த வேலை விஷயமாக இருவரும் ஜி. கல்லுப்பட்டி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி பயணம் செய்தனர்.

நேருக்கு நேர் வாகனங்கள் மோதி துயரம்

பின் மீண்டும் நள்ளிரவு நேரத்தில் திரும்பிய நிலையில், இருசக்கர வாகனத்தை வீரமுத்து இயக்கி இருக்கிறார். இருவரும் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி பிரிவில் வந்தபோது, தேனி நோக்கி எதிர்திசையில் லோடு வேன் பயணம் செய்தது.

இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும், நிகழ்விடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர், தந்தை - மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!