ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
திருப்பத்தூர்: சொத்துப்பிரச்சனையில் பயங்கரம்; தாய்மாமனை கொலை செய்த மச்சான்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, வக்கணம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி. இவரின் மகன் திம்மராயன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
திம்மராயனின் அக்காவுக்கு சக்கரவர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். சக்கரவர்த்திக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை வைத்து ரூ.30 இலட்சம் கடன் பெற்றதாக தெரியவருகிறது.
இந்த தகவலை அறிந்த திம்மராஜன், சக்கரவர்த்தியின் நிலம் தொடர்பான பட்டாவை பைனான்சியரிடம் இருந்து பெற்று, நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: #Breaking: ஏழை மாணவன் 3 மொழி படிப்பதில் என்ன தவறு? திமுக சிபிஎஸ்இ பள்ளியில் இந்தியை கைவிடுமா? எல்.முருகன் ஆவேசம்.!
தாய் மாமன் கொலை
இதுதொடர்பாக எழுந்த முன்விரோதத்தில், இன்று வாழைத்தோப்பில் உரம் போடச் சென்ற திம்மராஜனை வெட்டிப் படுகொலை செய்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், திம்மராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிலப்பிரச்சனையில் தாய்மாமனை மச்சான் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. மேற்படி விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: போதை ஆசாமியால் மீண்டும் அதிர்ச்சி.. சென்னை இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீற முயற்சி.!