கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்; 3வது மனைவியுடன் கணவர் விபரீதம்..! இருவரும் மரணம்.!



 in Tiruvannamalai Arani Man Dies Loan Torture

கடன் காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, சேர்ப்பாக்கம் கிராமத்தில் ராஜாராமன் (வயது 58). இவரின் முதல் மனைவி அலமேலு, இரண்டாவது மனைவி பூங்கோதை. இவர்கள் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திவிட்டனர். 

இதனிடையே, ராஜாராமன் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார். தம்பதிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: திருவண்ணாமலை: கூலித்தொழிலாளி வாகனம் மோதி பலி; நொடியில் நேர்ந்த சோகம்.!

 Tiruvannamalai

கடனால் விபரீத முடிவு

அப்போது, தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கிய நிலையில், கடனைக் கேட்டு பணம் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன தம்பதி ஆரணி வீட்டிற்கு வந்து, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தம்பதியின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது.

 

இதையும் படிங்க: ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!