17 வயது சிறுமியுடன் திருமணம், கணவன் - மனைவியாக குடித்தனம்.. சிறுவன் போக்ஸோவில் கைது..!



in Vellore Anaikattu Minor Boy and Girl Marriage 

 

காதல் திருமணம் செய்து குடித்தனம் நடத்திய ஜோடியிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதியில் இருக்கும் கிராமத்தில் 17 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். இவர் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கிறார். 

இதையும் படிங்க: #JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!

திருப்பதியில் டும்., டும்., டும்.

குடியாத்தம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கும் - சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தவர்கள், 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதி சென்று திருமணமும் செய்துள்ளனர்.  

திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவியாக வாழ்க்கையை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியின் திருமணம் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. 

3 மாத கர்ப்பமான சிறுமி

புகாரின் பேரில் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், திருமணத்தின்போது சிறுமியாக இருந்தவருக்கு 18 வயது ஆகி, 3 மாத கர்ப்பமாக இருப்பது அம்பலமானது. சிறுவனுக்கோ 18 வயது தற்போது வரை நிரம்பவில்லை. 

இதனால் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் சிறுவனின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Watch: நெஞ்சமெல்லாம் பதறுதே.. நொடியில், அண்ணன் கண்முன் தங்கை தலைநசுங்கி மரணம்..!