சகோதரரின் கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த தங்கை.. வேலூரில் துயரம்.. ஐடி ஊழியருக்கு நேர்ந்த நிலை.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி கிராமத்தில் வசித்து வருபர் சம்பத். இவரின் மகள் அஸ்வினி. மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த திங்கள் அன்று, காட்பாடி சாலையில், தனது சகோதரருடன் அஸ்வினி சென்று கொண்டு இருந்தார்.
கால்வாய் பணிகளால் சாலையில் மண் இருந்த பகுதி வழியே இருசக்கர வாகனம் சென்றுள்ளது. கடந்த சில மாதமாக பணிகள் மெத்தனத்தன்மையுடன் இங்கு நடப்பதாக கூறப்படுகிறது.
தலை நசுங்கி மரணம்
அப்போது, அஸ்வினி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், சாலையோரம் கிடந்த மண்ணில் சிக்கி சறுக்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில், அஸ்வினி பின்னால் வந்த செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கினார்.
இதையும் படிங்க: அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!
இதில் அவர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் கைது
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செப்டிக் டேங்க் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களில் மட்டும் 3 பேர் இதே சாலையில் மண்ணில் சரிந்து மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் ஆட்சியர் நேரடியாக அங்கு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் எதிர்திசைக்குள் பாய்ந்த ஜீப்; லாரியுடன் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி.!