விருதுநகர்: கள்ளக்காதல் வயப்பட்ட கணவனை வெறுப்பேற்ற நாடகம், கொலையில் முடிந்த சோகம்.. பறிபோன உயிர்.!



in Virudhunagar Aruppukottai Man Killed

கணவனின் உண்மையான கள்ளக்காதல் பழக்கமும், மனைவியின் நாடகமும் இறுதியில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி, அப்பாவி ஒருவரை சிறைக்கு செல்ல வழிவகை செய்த சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, புளியம்பட்டி, நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரைமுருகன் (வயது 40). அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, அமரர் ஊர்தி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

துரைமுருகனின் மனைவி ராமலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் 05 அன்று, உடலில் காயத்துடன் துரைமுருகன் மரணித்து வீட்டில் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்த விசாரணையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதையும் படிங்க: இராஜபாளையம்: "குடிக்காத பேரான்டி" - அறிவுரை கூறிய பாட்டி தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை.. 25 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

விசாரணையில் அதிரவைக்கும் காரணமும் வெளியானது.அதாவது, துரைமுருகன் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் ராமலட்சுமிக்கு தெரியவந்து அவர் சத்தமிட்டாலும், துரைமுருகன் அதனை கண்டுகொள்ளவில்லை.

Virudhunagar News Today

கணவரை வெறுப்பேற்ற செயல்

இதனால் கணவருக்கு வெறுப்பை ஏற்படுவதுவது போல செயல்பட்டு தன்பக்கம் திருப்ப வேண்டும் என லட்சுமி முடிவெடுத்துள்ளார். இதனால் சத்தீஸ்கரில் வேலை பார்த்து வரும், உறவினரான விருதுநகரை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஜெயகணேசனிடம் (வயது 35), தான் தொடர்பில் இருப்பதைப்போல வீடியோ கால் பேசி பாவித்து வந்துள்ளார்.

இதனால் எழுந்த பிரச்சனையில் ஜெயகணேஷை தொடர்பு கொண்ட துரைமுருகன், உனது குடும்பத்தை கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட ஜெயகனேஷ் விடுமுறை எடுத்து துரைமுருகன் வீட்டுக்கு வந்து, அவரை கொலை செய்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அருப்புக்கோட்டை காவல்துறையினர் ஜெயகணேசை நேற்று கைதுசெய்தனர். 

இதையும் படிங்க: பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!