மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராணுவ வீரர்களுக்கு கவிதை வடிவில் புகழாரம் சூட்டியுள்ள கவிஞர் வைரமுத்து.!
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
போர்மீது விருப்பமில்லை.
— வைரமுத்து (@vairamuthu) February 26, 2019
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்.#IndianArmyRocks #revengeforpulwama #IndianArmyOurPride