மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோயில் பூசாரி செய்ற காரியமா இது..? பதறிய பெற்றோர்.. அதிரடி காட்டிய போலீஸ்..!
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளும், இளம் பெண்களும் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வசித்து வரும் 10 வயது சிறுமி பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அறிந்து பதறிப்போன பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் வசித்து வரும் கோயில் பூசாரி ஒருவர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்பலமானது. இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் பூசாரியை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.