திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்வு பிட் செக்கப்பிற்கு சிறுமியின் ஆடையை அவிழ்த்து சோதனை; மனமுடைந்த சிறுமி விபரீத முடிவு.. கண்ணீர் சோகம்.!
9 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நடந்த தேர்வின்போது, பிட் செக்கப் என்ற பெயரில் ஆசிரியை செய்த கொடுமையால் மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது, தேர்வு எழுதிக்கொண்டு இருந்த 9ம் வகுப்பு மாணவி முறைகேடு செய்ததாக தெரியவருகிறது.
அவர் பிட் பேப்பர் வைத்துள்ளார் என்று எண்ணிய ஆசிரியை, மாணவியை தனியே அழைத்துச்சென்று ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். மாணவி தான் ஏதும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறியும் கேட்காமல் ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்துபோன மாணவி வீட்டிற்கு வந்து வருந்திக்கொண்டு இருந்த நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று ஆசிரியை கைது செய்தனர்.