கணவரை இழந்து தவிக்கும் ஜே.கே ரித்தீஷ் மனைவிக்கு, அவரது நண்பர்களால் இப்படியொரு துயரமா?



jk rithish friend blackmailed his wife

பிரபல நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் என அனைவராலும் அறியப்பட்டவர் ஜேகே ரித்தீஷ். இவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் மரணம் அடைந்தார். இந்நிலையில் ஏராளமான சொத்துக்களை கொண்டு விளங்கும் ஜேகே ரித்தீஷ் மனைவிக்கு ரித்தீஷின் நண்பர்கள் மிரட்டல்கள் விடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

 ஜேகே ரித்தீஷ்க்கு ஆதம் பாவா என்ற நண்பர் உள்ளார். அவர் ரித்தீஷின் பல சொத்துக்களையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ரித்தீஷ்  இறந்த பிறகு பாவா தனது வீட்டிற்கு வந்த தன்னை மிரட்டுவதாக ஜோதீஸ்வரி புகார் அளித்துள்ளார்.

jk rithish

ஜேகே ரித்தீஷ் கடந்த ஜனவரி மாதம் 25  கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளி மற்றும் சில வீடுகளை சுப்ரமணி என்ற நபரிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும் 4கோடி ரூபாய் வரை அவருக்கு அட்வான்ஸும் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்கு முன்பே ரித்தீஷ் உயிரிழந்துவிட்டார்.  இந்நிலையில் ரித்தீஷின் மனைவி 4 கோடி ரூபாயை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். 

இதற்கு சுப்ரமணியும் ஒத்துக் கொண்ட நிலையில் ரித்தீஷின் நண்பர் பாவா தனது வீட்டிற்கு வந்து குழந்தைகள் முன்னால் தனக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். மேலும் தனது கணவரின் சொத்து மற்றும் தொழில் பங்குகளை அபகரிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.