மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சோகம்; உணவு சாப்பிட்ட 23 தொழிலாளர்ளுக்கு உடல்நலக்குறைவு.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கான உதிரி பாகங்கள் தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு நேற்று இரவில் கேண்டினில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது, இரவு நேர பணியாற்றிய பெண்கள் சாப்பிட்டு கொண்டு இருந்த நிலையில், உணவை சாப்பிட்ட 23 பேருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களை மீட்ட சக பணியாளர்கள் வாலாஜாபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாலாஜாபாத் காவல் துறையினர், கேன்டீன் ஒப்பந்ததாரரிடம் விசர்நாய் நடத்தி வருகின்றனர்.