வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இன்ஸ்டா காதலிக்கு இம்சை தந்த காதலன்; பழக்கத்தை நிறுத்தியதால் அந்தரங்க போட்டோ லீக்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலந்தையடிவிளை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் செயலி உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
அதில், சிறுமிக்கு அபிஷேக் என்ற மின்வாரிய ஒப்பந்த ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஒருகட்டத்தில் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆபாச படமெடுத்து மிரட்டல்
சிறுமியை தனது வலையில் வீழ்த்திய அபிஷேக், ஒருகட்டத்தில் அவரை ஆபாசமாக படமெடுத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்குப்பின் இருவரும் பேசிவந்த நிலையில், அபிஷேக்கின் செயல்பாடுகள் மாறியதால் சிறுமி அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், காதலியின் அந்தரங்க புகைப்படத்தை ஸ்டேட்ஸில் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: குளத்தில் நண்பர்களுடன் உற்சாக குளியல்; அக்கரைக்கு நீந்த ஆசைப்பட்டு இளைஞர் பரிதாப பலி.!
நண்பர்கள் 4 பேர் சர்ச்சை செயல்
இதனை பதிவிறக்கம் செய்த அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடவே, விஷயம் சிறுமியின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அழிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் மற்றும் அவரின் 4 நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 55 கிமீ வேகத்தில் வீசும் சூறைக்காற்று; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு.!