பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#பதைபதைப்பு வீடியோ: சினிமா பாணியில் அரசு பேருந்து மீது பாய்ந்து மோதிய கார்.. அரசு மருத்துவர் பலி..!
அரசு பேருந்தை நிறுத்தும் முயற்சியில், காரை இயக்கி வந்த அரசு மருத்துவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினார்.
மதுரை நகரின் வெளிப்புற சுற்றுவட்டசாலையில், திருமங்கலம் செல்லும் வழியில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி அருகேயுள்ள சாலையில் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து, அவ்வழியாக சென்ற காரினை உரசியபடி சென்றுள்ளதாக தெரியவருகிறது.
காரை இயக்கி வந்த மருத்துவர், அரசு பேருந்தை துரத்தி பிடிக்க முயற்சித்து வாகனத்தை வேகமாக இயக்கி இருக்கிறார். அப்போது, பேருந்தை தடுத்து நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்து, கட்டுப்பாட்டினை இழந்த கார், சென்டர் மீடியன் வழியாக பாய்ந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தில் பயங்கரமாக மோதியுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், காரில் பயணித்த அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் காத்திகேயன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
🦉#மதுரை : அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற் #கார், எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். A speeding car which allegedly tried to overtake a government bus plunges into another oncoming bus in the opposite lane in Madurai. pic.twitter.com/BsJ01SIrW8
— Àanthai Répørter (MASKUpTN) 🦉 (@aanthaireporter) December 20, 2021