ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
எஸ்.பி அலுவலகத்தில் பூட்டிய அறைக்குள் நடந்த அட்டூழியம்.! கதவை தட்டிய அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பு சம்பவம்!!

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அவர்களது தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என 100க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த அலுவலகத்தில் ஆண் மற்றும் பெண் காவலர் ஒருவர் தனிமையில் இருப்பதாக துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் சென்றுள்ளது. தகவலறிந்து அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த ஏசி அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. துணைக் காவல் கண்காணிப்பாளர் வெகுநேரமாக கதவை தட்டியும் உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்கவில்லை.
பின்னர் அவர் மிரட்டிய நிலையில் பயந்துபோன அவர்கள் கதவை திறந்து வெளியே வந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஆண் நபர் அதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் என தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியில் உள்ளவர் என கூறப்படுகிறது.
பின்ன இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஎஸ்பி புகார் அளித்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு பணியின் போது ஒழுங்கீனமாக செயல்பட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.