அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
என் முதல் பார்வைலையே பெண்கள் வீழ்ந்துவிடுவார்கள்! இளைஞர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவர் கடந்த வாரம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்த பெற்றோர், சபரி அபிஷேக்கைப் பிடித்து மிரட்டியுள்ளனர்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் அங்கு சென்று விசாரித்துள்ளார். அதில், மாணவி தனக்கு நடந்த கொடுமை பற்றி அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞரின் தொலைபேசியை வாங்கி பார்த்ததில் பல இளம்பெண்களின் அந்தரங்க வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அந்த இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், நான் ஜிம்முக்கு சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன் என்றும் அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் வீழ்ந்துவிடுவார்கள்.
பிறகு அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களிடம் அன்பாக பேசி அவர்களை வெளியே அழைத்து செல்வேன் என்றும், திருமண ஆசை கூறி அவர்களுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பேன் எனவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
மேலும், அந்த விடீயோயோக்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார். அந்த இளைஞரின் தொலைபேசியில் இருந்து 6 இளம் பெண்களின் வீடியோக்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.