மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாகுற வயசா அவளுக்கு?., பாவிகளா.. மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுமி பலி..! கதறும் தாய்..!!
அரசுத்துறை அதிகாரிகள் தங்களின் பணியை சரிவர செய்யாத காரணத்தால், சிறுமியின் உயிர் பரிதாபமாக பறிபோனது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தலாம், கப்பூர் கிராமம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் காசி. இவரின் மகள் கீர்த்தனா. 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த கிராமத்திலேயே கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பி தாழ்வாக இருந்துள்ளது. இதனை சீரமைத்து தர பலமுறை கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் அங்கு நடந்துள்ளளது. இதற்கிடையில், கீர்த்தனா தாழ்வாக சென்ற மின்கம்பி அருகே சென்றபோது, அது அறுந்து விழுந்துள்ளது.
இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமியின் தாய், சாகுற வயசா அவளுக்கு., ஒன்றும் தெரியாத எனது குழந்தையை கொன்று விட்டீர்களே., பாவிகளா நல்லா இருப்பீங்களா? என்று அவரது உடலைக்கண்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.