திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரையை சிட்னி போன்று மாற்றுவேன்.! உறுதியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்லூர் ராஜூ நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ-க்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவது உறுதி. யார் என்னை கிண்டல் செய்தாலும் நிச்சயமாக மதுரையை சிட்னியாக, மெல்போர்னாக மாற்ற எனது எதிர்கால நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.