ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சம்பந்தியின் கள்ளக்காதலுக்கு முடிவு கட்ட செய்த காரியத்தால் விபரீதம்!.. பாதியிலே பறிபோன உயிர்..!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கருமாநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய கூலியாக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே முத்து லட்சுமிக்கும், வையப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முத்துலட்சுமியின் சம்பந்தி சக்திவேல், அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதற்கு பின்பும் வையப்பன் முத்துலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், தனது வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்த வையப்பனை சுத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த வையப்பன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை மீட்ட முத்துலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த இடையகோட்டை காவல்துறையினர், வையப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், சக்திவேலை கைது செய்தனர்.