வலியில் துடிதுடிக்க கூறிய கடைசி வார்த்தைகள், பருவமடைந்த தன் மகளை கஜாவிற்கு காவு கொடுத்த தாயின் நெஞ்சை பிளக்கும் கதறல்.!



mother-said-about-last-minute-of-daughter

வங்க கடலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நகர்ந்து வந்த  நிலையில் கடந்த 15-ம் தேதி அதிவேக காற்று மற்றும் மழையுடன் கரையை கடந்தது.

இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில்  மரங்கள் அடியோடு சாய்ந்து  பல வீடுகள் சேதமடைந்துள்ளது. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.ஓடு மற்றும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்றுவரை பல ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் பூப்பெய்திய தனது 14 வயது மகளை பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் தாய் தனது மகளின் கடைசி நிமிடங்கள் குறித்து கூறியதாவது  .

என் மகளை இதுவரை தனியாக தூங்குவதற்கு நாங்கள் அனுமதித்தது கிடையாது. ஆனால், வயதுக்கு வந்த நிலையில் அதற்கான சடங்குகள் செய்து முடிக்கும்வரை அவரை நாங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

அதனால்  எனது மகளுக்கு தனியாக குடிசை  அமைத்து அவளை அங்கு தங்கவைத்திருந்தோம்.மேலும்  அவளுக்கு துணையாக நானும் எனது அம்மாவும் அவளுடன் சென்று படுத்துக்கொண்டோம். 

           Gaja cyclone

இந்நிலையில் புயல் வந்த அன்று  குடிசை மீது சாய்ந்த பெரிய தென்னைமரம் என் மகளின் நெஞ்சு பகுதியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மரத்தின் மற்றொரு பாகம் பானுமதியின் இடது கால் மீது விழுந்ததால் வலி தாங்க முடியாமல் கதறினாள்.

அப்பொழுது என் அம்மா மட்டும் தப்பித்து சிரமப்பட்டு வெளியேறி தென்னந்தோப்பிற்கு அருகில் இருந்தவர்களை கூட்டிவர சென்றார்.மேலும் அப்பொழுது அங்கு வந்த என் கணவரும் முடிந்தவரை மரத்தை இழுத்துப்பார்த்தார். ஆனால் முடியவில்லை. நான் என் மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்தபடியே ஒரு மணி நேரம் அவளோடு இருந்தேன்.

மேலும் என் மகளை அடக்கம் செய்வதற்கு முன்பு அவள் முகத்தைக் கூட பார்க்கமுடியவில்லை. இறுதியாக அவள் உயிர் போகும் நேரத்தில் வாயில் ரத்தத்துடன் அம்மா என்று அழைத்ததும், நான் சாகப்போகிறேன்மா என்று சொன்ன வார்த்தைகளும் மட்டுமே என் கண்களில் வந்துபோகின்றன.

அவள் இல்லாமல் இந்த நினைவுகளை சுமந்துகொண்டு எப்படி வாழ்வேன்  என சிறுமியின் தயார் கதறி அழுதது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.