பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் மற்றொரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.!



MVMM School teacher suspended

பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து  சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், இரட்டை அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாசமாக பேசுதல், வீடியோ கால் செய்தல், ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் தோன்றுதல், ஆபாசமாக மெசேஜ் செய்தல் போன்ற நடவடிக்கையில் ஆசிரியர் ஈடுபட்டதாக மாணவிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு போக்சோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தநிலையில், சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் என்பவர் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. 

School teacher

இதனையடுத்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து அந்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து  மேலும் ஒரு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.