7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 55 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள கிராமத்தில், 7 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வரும் குமார் (வயது 55) என்பவர், மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
மளிகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி செயல்
இதனிடையே, வீட்டுக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது சிறுமி கடைக்குச் சென்று வாங்கி வருவது வழக்கம் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று பொருட்கள் வாங்கச் சென்ற சிறுமிக்கு குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
போக்ஸோவில் கைது
இந்த விஷயம் குறித்து தாயிடம் சிறுமி தெரிவிக்கவே, அவர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1000 கொடுக்குறேன் வா.. 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல்.!
இதையும் படிங்க: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 13 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரே கவனம்.!