மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூரான் விழுந்த உணவை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி; நாகப்பட்டினத்தில் பரபரப்பு..!
நாகப்பட்டினம் நகரில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், இவர்களில் விடுதியில் தங்கி உள்ளவர்களுக்கு நேற்று இரவு நிர்வாகம் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டன.
இதனை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டிருந்த மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
விசாரணையில் மாணவிகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் சமைக்கும்போது பூரான் விழுந்ததும், அதனை தெரியாமல் சாப்பிட்ட மாணவிகள் உடல் நலக்குறைவாக அவதிப்பட்டதும் அம்பலமானது.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.