மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11 மாத குழந்தை வாளியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழப்பு; நாமக்கல்லில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
நீர் நிரம்பி இருந்த வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 மாத குழந்தை இருக்கிறது. இந்த குழந்தையின் தாயார் இன்று பகல் வேலையில் தொட்டியில் நீர் பிடிக்க சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குழந்தை தவழ்ந்தவாறு நீர் இருந்த வாளியில் தவறி விழுந்துள்ளது. தண்ணீர் பிடிக்க சென்ற தாய் குழந்தை வாளிக்குள் அசைவற்று இருப்பதை கண்டு அலறியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை வாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.