அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
குடும்ப தகராறில் பயங்கரம்.. உடன்பிறப்பை போட்டுத்தள்ளிய 2 அண்ணன்கள்.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி சம்பவம்.!
குமாரபாளையம் அருகே குடும்ப சண்டையில் தம்பியை அண்ணன்கள் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வருபவர் ஆனந்தன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனந்த ஆனங்கூர் பகுதியில் மதுபான பார் நடத்தி வந்துள்ளார். நேற்று, ஆனந்தனின் மூன்றாவது மகன் குரு, தந்தையின் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, பாருக்கு வந்த ஆனந்தனின் மூத்த மகன்கள் கார்த்திக் மற்றும் அசோக் ஆகியோர் சென்று குருவை தாக்கி இருக்கின்றனர். மூன்றாவது மகனை பிற 2 மகன்களிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாத நிலையில், குருவின் தலையில் சகோதரர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்து மதுபான பாட்டிலை உடைத்து, குருவின் கழுத்தை அறுத்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த குமாரபாளையம் காவல் துறையினர், உயிருக்கு போராடிய குருவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், குரு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, கொலை வழக்காக பதிவு செய்த அதிகாரிகள், கார்த்திக் மற்றும் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.