#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுதான் ஒரே வழி, செய்யுங்க.! பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஆக்ரோஷமாக அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ!!
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கவேண்டும் என குரல் எழுப்பி வந்தனர்.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அறந்தாங்கி நிஷா இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆவேசத்தோடு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள். இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டியது தான். ஏனென்றால் 10 , 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம்.மேலும் பெண்களுக்கு தங்களது மானத்தை காக்க யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற உரிமை கொடுக்க வேண்டும்
மேலும் பொள்ளாச்சி விவகாரத்திற்கு தீர்வாக யாரும் ஓட்டு போட கூடாது எனவும், தானும் ஓட்டு போட மாட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒட்டு போட்டே ஆகவேண்டும் என்றல் நோட்டாவிற்கு போடுங்க. ஓட்டு வரலைனா என்ன காரணம் என கெர்பர் என அறந்தை நிஷா ஆவேசமாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
என ஆவேசமாக கூறியுள்ளார்.