திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வடமாநில இளைஞர் கைது.!
கோவை அருகே சூலூர் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுடன் வட மாநில இளைஞர்கள் சிலரும் தங்கி வேலை செய்துள்ளனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதும் தெரிந்த உடன் அந்த வட மாநில இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டார்.
இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் சூலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைந்து சென்று வடமாநில இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.