திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BIG BREAKING: சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 17 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு..! மக்களே வெளியே வந்துடாதீங்க.!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாங் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு (2 டிசம்பர் 2023, இரவு 10 மணிவரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இடி-இன்னலுடன் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.