மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி ஆசிரியரை சரமரியாக தாக்கிய பெற்றோர்... இரண்டாம் வகுப்பு மாணவனால் நடந்த ரகளை...!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழநம்பியார்புரம் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில். சுமார் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை தலைமை ஆசிரியர் அடித்ததாக மாணவனின் தாத்தா ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது திடீரென தலைமை ஆசிரியரை மாணவனின் தாத்தாவும், அவரது உறவினர்களும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த, சக ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர்.
மேலும் பள்ளியில் இருந்த மேசை, நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இதைப்பார்த்த அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தி, காயமடைந்த ஆசிரியர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.