விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
திடீரென தாக்கிய விஷத்தேனீக்களால் அவதி படும் 50 பணியாளர்கள்!!
விழுப்புரத்தை அடுத்த திண்டிவனம் அருகே காட்டுசிவிரி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விஷத் தேனீக்கள் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துள்ளனர்.
திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவிரி கிராமத்தில் இந்த விஷத்தேனீக்கள் கடித்து 50 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அன்று 100 நாள் வேலை வாய்ப்பு பணி மேற்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களை திடீரென வந்த விஷ தேனீக்கள் கடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் 50 பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.திடீரென வந்த விஷத் தேனீக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.