மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலிரவு அறையில் மணமகளுக்கு நேர்ந்த கொடுமை... புகாரின் பேரில் மணமகன் கைது.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலிரவு அன்று மணப்பெண்ணிற்கு பாலியல் துஷ்பிரயோகம் கொடுத்ததாக மணமகனின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நாகப்பட்டினம் எஸ்பி உத்தரவின் பேரில் மணமகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவனை அடுத்துள்ள தொழுதூர் பகுதியைச் சேர்ந்த பிச்சை என் என்பவரது மகன் ராஜகுமாருக்கும் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகள் நலினிக்கும் கடந்த மாதம் 27ஆம் தேதி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமணம் முடிந்த அன்று முதல் இரவின் போது மணமகன் ராஜ்குமார் மணமகள் நனினியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் பாலியல் துஷ்பிரியோகத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி இருக்கிறார் நளினி. இதனைத் தொடர்ந்து அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் மணமகன் முதல் இரவு அன்று தங்கள் மகளிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டதாகவும் மேலும் நளினியை பெண்ணே இல்லை என்று சொல்லி வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் எஸ்பி ஜவகர் உத்தரவின் பெயரில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மணமகன் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.