96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!!
வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசுப்பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்குவது வழக்கம். இந்த வருடமும் அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் தொகை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
முழு மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 1000 ரூபாய் போனஸ் வழங்கப்படும். மேலும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.