மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பரிசு விவகாரம்; மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு.!
தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு நியாய விலைக்கடைகள் வாயிலாக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம் வழங்கபடுகிறது. கடந்த ஆண்டில் ரூ.1000 பணம் இல்லாமல் 21 தொகுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அவை மீது எழுந்த விமர்சனத்தால் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, ரூ.1000 பணம் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.
நியாய விலைக்கடைகள் வாயிலாக பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட வேண்டிய பணிகள் அனைத்தும் விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாவட்ட ஆட்சியர்கள் பொங்கல் பரிசு மக்கள் அனைவர்க்கும் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறி திரும்ப அனுப்பக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரத்துடன் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறியுள்ளது.