கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: ஊர்ந்தபடி பயணிக்கும் வாகனங்கள்.!
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வரும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இன்னும் 2 நாட்கள் பொங்கல் பண்டிகைக்கு எஞ்சியிருக்கும் நிலையில், வார இறுதியான வெள்ளி, சனிக்கிழமைகளை கருத்தில் கொண்டு மக்கள் முன்னதாகவே கிடைத்த விடுமுறையை பயன்படுத்தி பயணத்தை தொடங்கியுள்ள்ளனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை முதல் மக்கள் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், சனிக்கிழமையான இன்று மாலை முதல் பலரும் தங்களின் பயணத்தை தொடங்கி இருக்கின்றன.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் அரசு, தனியார் பேருந்துகள் வாயிலாகவும், தங்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் நகரமே மீண்டும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டுள்ளன. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நெடுந்தூரம் ஊர்ந்தபடி தொடர்ந்து பயணம் செய்கிறது.