சொத்து தகராறு: தந்தைக்கு டிரம்மில் சமாதி கட்டிய மகன்!..தேடுதல் வேட்டையில் காவல்துறை..!



property-dispute-son-who-killed-and-buried-his-father-Z4Q4QC

வளசரவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக சொந்த மகனே தந்தையை அடித்து கொலை செய்து விட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(80), இவர் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு குணசேகரன்(55 ) என்ற மகனும், காஞ்சனா பரிமளா யமுனா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

குமரேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில் அவரது மகன் குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். இரண்டாவது தளத்தில் குமரேசன் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மூத்தமகள் காஞ்சனா தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார். தந்தையின் அறை பூட்டி இருந்ததால் குலசேகரனிடம் விசாரித்துள்ளார். ஆனால் சரியான பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த மக்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது ரத்தவாடை மற்றும் ரத்தக்கறை படிந்திருந்த்தை பார்த்த காஞ்சனா அதிர்ச்சியடைந்தார். உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவதை அறிந்த குணசேகரன் தலைமறைவானார். விசாரணையில் சொத்து தகராறு காரணமாக தந்தையைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே குணசேகரன் குழி தோண்டிப் புதைத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.