மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! சொத்து தகராறு இளம் பெண் இரும்புராடால் அடித்துக் கொலை.. இளைஞரின் வெறிச்செயல்..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேரைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகன் மற்றும் தாயார் ஆகியோருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முருகனுக்கும் அவரது சித்தப்பா மகனான விஷாலுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு வீட்டில் இருந்த முருகன், மனைவி ரம்யா , மகன் மற்றும் தாயார் மீது விஷால் இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் முருகனின் மனைவி ரம்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்ற 3 பேரும் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய விஷாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.