மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொத்து தகராறு.. சம்பட்டியால் அடித்து இளைஞர் கொலை.. போலீஸ் விசாரணை..!
திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் சம்பட்டியால் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னம்மநாயகன்பட்டி அருகே உள்ள குரும்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவருக்கு ராஜபாண்டியன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் சகோதரி அய்யமாலுக்கும் பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யமாலின் மகன் சக்திவேல் தனக்கு சொத்தை எழுதி தருமாறு பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைமடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாண்டியனின் வீட்டிற்கு சக்திவேல் தனது நண்பர்களுடன் சென்று பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார். பின்பு தனியாக இருந்த ராஜபாண்டியை சம்பட்டியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலைக்கு காரணமான சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.