மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேத்தி தற்கொலை செய்த துக்கம் தாளாது, தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரிழப்பு: புதுக்கோட்டையில் சோகம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, கோவிலூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அடைக்கலம். இவர் டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
அடைக்கலத்தின் மனைவி ரேவதி. தம்பதிகளுக்கு 15 வயதுடைய ராஜசேகர் என்ற மகனும், 14 வயதுடைய ஹர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இருவரில் ஹர்ஷினி கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
அடைக்கலத்தின் தந்தை சுப்பிரமணியம் (வயது 70), இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஹர்ஷினி நீண்ட நேரம் தூங்கிய நிலையில், ராஜசேகர் அதனை கண்டித்து இருக்கிறார்.
தனது தாயாருடன் வெளியே சென்றுவிட்ட நிலையில், தனது அண்ணன் திட்டியதால் மனமடைந்து காணப்பட்ட தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இறுதிச் சடங்கு நிறைவுபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேத்தியின் மீது பாசமாக இருந்த தாத்தா சுப்பிரமணி, தனது பேத்தியின் உடலை பார்த்து காலை முதலாகவே அழுதபடி இருந்துள்ளார். மேலும், உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. மயானத்திலிருந்து வீட்டிற்கு வர முடியாமல் துக்கத்தால் தவித்த நிலையில், வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து பேத்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு அருகே, தாத்தாவின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.