மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#சற்றுமுன்: பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதிய லாரி: 5 பேர் பலி., பலர் படுகாயம்.. தமிழகத்தில் சோகம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நமண சமுத்திரம், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சிமெண்ட் பாரம் ஏற்றுச் சென்றது.
அதே பகுதியில் எதிர்திசையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் குழுவினர் நடந்து வந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.
அச்சமயம், லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்மணி உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று வயது சிறுமி உட்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை காவல்துறையினர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மேலும், உயிரிழந்தோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் யார் எங்கிருந்து? வந்தனர் விபத்து எப்படி நிகழ்ந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.