சான்விட்ச் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. ராணிப்பேட்டை ரஷீத் கேன்டீனில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்..!



Ranipet Private Hotel Food Poison

காலாவதியான பொருட்களை வைத்து சான்விட்ச் செய்துகொடுத்த கேன்டீனால் சிறார்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கோட்டைமேட்டு காலனியை சேர்ந்தவர் சாலமன். இவரின் மனைவி ரூபி. தம்பதிகள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்து ஊழியம் செய்து வருகிறார்கள். விடுமுறை நாட்களில் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன், சைமன் சிறுவர்கள் மாமாவான சாலமனின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். 

நேற்று மாலை இராஜேஸ்வரி திரையரங்கம் எதிரில் இயங்கி வரும் ரஷீத் கேண்டினுக்கு சென்ற சாலமன், சிறுவர்களுக்கு சாப்பிட சான்விட்ச் வாங்கி கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட சிறுவர்கள் சிறிது நேரத்திற்கு உள்ளாகவே வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் சாலமன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளார். 

Ranipet

சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் சாப்பிட்ட உணவு விஷமாக மாறி இருக்கிறது. இதனால் உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கேன்டீனில் காலாவதியான பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் ரஷீத் கேன்டீன் தற்காலிகமாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.