மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பெண் மருத்துவருக்கு பிரசவம்.. குவியும் பாராட்டுகள்.!
சேலம் மாவட்டம் ஆத்தூர், கூடமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு மருத்துவராக ஐந்து வருடங்களாக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா (31). இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, மதுரையைச் சேர்ந்த மருத்துவரான புகழ் என்பவருடன் திருமணம் மநடைபெற்று முடிந்தது.
தற்போது ஹர்ஷிதா கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். தான் வேலை பார்க்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனையும், மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், ஹர்ஷிதாவுக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதாகவும், மருத்துவரான ஹர்ஷிதா ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தன்னை பிரசவத்திற்காக அனுமதிக்குமாறும் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, அவருக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது மருத்துவரான ஹர்ஷிதாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவருக்கு சுகப்பிரசவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவரான ஹர்ஷிதா ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.