மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: டபுள் மீனிங்கில் பேசி பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் பணியிடைநீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.!
மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் காட்டுக்கொட்டை செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இந்த அரசு பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 600-க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் ஆசிரியராக பயின்று வரும் மாரிமுத்து, எப்போதும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன மாணவிகள் விஷயம் குறித்து தங்களின் பெற்றோரிடம் நடந்ததை கூறவே, அவர்கள் பள்ளி நிர்வாகத்தில் முறையிட்டு இருக்கின்றனர். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடந்ததில் குற்றம் உறுதியாக, மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.