பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சேலம் மென்பொறியாளரை மிரட்டி ரூ.8 இலட்சம் பறித்த உ.பி கும்பல்; இப்படியும் அதிர்ச்சி மோசடி.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் 29 வயது நபர், பெங்களூரில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அவரின் செல்போனுக்கு பேசிய மர்ம நபர், மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு தடை செய்யப்பட்டுள்ள மருத்துவ பார்சலை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட எஞ்சினியர் மறுப்பு தெரிவிக்க, மறுமுனையில் பேசிய நபர் தன்னை சைபர் கிரைம் அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மேலும், உங்களின் பெயரில் பார்சல் வந்துள்ளது. இவ்வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க ரூ.27 இலட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டி இருக்கிறார்.
பயந்துபோனவர் ரூ.8.29 இலட்சம் பணத்தை 3 தவணையாக மர்ம நபரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.