திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் திடீர் மாற்றம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
மிக்ஜாங் புயலின் காரணமாக சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள நீர், போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தலைநகர் நோக்கி பணிகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர் தாலுகாவில் இருக்கும் பள்ளி - கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.