#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்! சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல், இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. அந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த 16வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் பள்ளியில் படித்து வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி வெளியில் சென்ற நிலையில் காணவில்லை என்று அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.