ShareChat செயலியில் சிக்கிய சிறுமிகள் உட்பட 20 இளம்பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய காமுகன்.. பகீர் வீடியோ வைரல்..! 



ShareChat Fraud Capture by Team

 

சமூக வலைத்தளத்தில் உள்ள செயலிகளில் ஆர்வத்துடன் இருக்கும் பெண்கள், அவற்றில் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக அறிந்துகொள்வது இல்லை. அப்படியான ஒரு துயரம் குறித்த விஷயம் அம்பலமாகியுள்ளது. 20 பெண்களின் வாழ்க்கையை இளைஞர் சீரழித்ததாக வைரலாகி வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் குணா என்பவர், 14 முதல் 17 வயதுள்ள சிறுமிகளின் இருந்து இளம்பெண்கள் வரை பலரையும் ஷேர்சாட் செயலி மூலமாக காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி இருக்கிறார். அவரின் பிடியில் சிக்கிய சிறுமிகளிடம் முதலில் அவர் நம்பிக்கையை பெரும் வகையில் பேசியுள்ளார். 

பின்னர், அவர்களை காதல் வலையில் வீழ்த்தும் குணா, தனிமையில் அவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி நிர்வாண புகைப்படங்களை பெற்று வைத்துள்ளார். இந்த படங்களை வைத்து பின்னாட்களில் இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்து உல்லாசமாக செலவு செய்தும் வந்துள்ளான். 

தான் காதலித்த பெண்களை நியாபகம் வைக்கும் பொருட்டு உடலெல்லாம் பச்சை குத்தியுள்ள குணா, சேத்தியாத்தோப்பு, சேலம், சென்னை போன்ற பல நகரங்களை சேர்ந்த பெண்களை ஏமாற்றி இருக்கிறான். இறுதியாக 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய நிலையில், அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய உறவினரின் நண்பர் குணாவை பிடித்து விசாரித்துள்ளார். 

அப்போது, 17 வயது சிறுமிக்கு தொடர்பு கொண்டு அவரிடம் குணா குறித்த உண்மையை தெரிவிக்கையில், அவரை விட்டுவிடுங்கள் என வாதாடிய பெண்மணி, 20 பெண்கள் மீது தவறு உள்ளது. அவர்கள் குணாவை ஏமாற்றிவிட்டனர் என ஆதரவாக பேசி இருக்கிறார். குணாவை பிடித்தவர்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்போவதாக தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பான காணொளி வைரலாகி வருகிறது. 

Disclaimer: இந்த செய்தி மேற்கூறிய வீடியோவில் உள்ளதை மட்டுமே பதிவு செய்துள்ளது. விடீயோவின் உண்மைத்தன்மை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.